இலங்கையுடனான பங்களிப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை - அவுதிஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்
இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நோக்கங்களுக்குப் பொருந்தும் வகையில், எப்போதும் ஒத்துழைப்புகளையும் பங்களிப்புகளையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நோக்கங்களுக்குப் பொருந்தும் வகையில், எப்போதும் ஒத்துழைப்புகளையும் பங்களிப்புகளையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான அவுஸ் திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ் திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் கடந்த வியாழக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் ரூத் பைட் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் மேலும் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கைக்கும் அவுஸ்திரேலிய இடையே நிலவும் நீண்டகால நட்பு மற்றும் அவுஸ் திரேலியாவில் வாழும் பெருமளவிலான இலங்கை சமூகம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இலங்கையின் விவசாயம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நோக்கங்களுக்குப் பொருந்தும் வகையில், எப்போதும் ஒத்துழைப்புகளையும் பங்களிப்புகளையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊழல் எதிர்ப்புத் திட்டங்களை அவுஸ்திரேலிய அரசாங்கமும் சாதகமாகப் பார்ப்பதாக உயர்ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
'தித்வா சூறாவளி தாக்கத்தின் போது அவுஸ்திரேலியா வழங்கி ஒத்துழைப்புக்கும், அதற்காக உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்ட தலையீட்டிற்கும் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதன்போது நன்றித் தெரிவித்துள்ளார்.





