ஐக்கிய அரபு இராச்சிய விமானங்கள் வருகை
கொழும்பிற்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் கலீத் நாசர் அல்அமேரி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அலபாரி ஆகியோரால் இந்த உதவிப் பொருள் இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்தன.
சி -17 விமானங்களில் இரண்டு மீட்புப் படகுகள், தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நான்கு K9 வகை நாய்கள், டபிள் கெப் மற்றும் எஸ்.யு.வி. உள்ளிட்ட மீட்பு வாகனங்கள், லொரிகள் மற்றும் 53 பணியாளர்களைக் கொண்ட விசேட நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புக் குழு உள்ளிட்ட அத்தியாவசிய அனர்த்த மீட்பு உபகரணங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.
கொழும்பிற்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் கலீத் நாசர் அல்அமேரி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அலபாரி ஆகியோரால் இந்த உதவிப் பொருள் இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மத்திய கிழக்குப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்களான இஷாரா டி சில்வா மற்றும் தினுஷிகா தசநாயக்க ஆகியோர் இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றனர். இந்த நெருக்கடியான நேரத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கிய அவசர ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.