Breaking News
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்
வேகம் மற்றும் பல்வேறு திறன்களுக்காக கட்டமைக்கப்பட்ட இக்கப்பல், ஆழமற்ற நீர் மற்றும் திறந்த கடல் இரண்டிலும் இயங்கக் கூடியது. இது அமெரிக்காவின் அதிநவீன கடல்சார் திறனை பிரதிபலிக்கிறது.
கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டல்ஸா நேற்று புதன்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வேகம் மற்றும் பல்வேறு திறன்களுக்காக கட்டமைக்கப்பட்ட இக்கப்பல், ஆழமற்ற நீர் மற்றும் திறந்த கடல் இரண்டிலும் இயங்கக் கூடியது. இது அமெரிக்காவின் அதிநவீன கடல்சார் திறனை பிரதிபலிக்கிறது.
இறுதியாக 2021ஆம் ஆண்டு இலங்கை கடற்படையுடன் இணைந்த பயிற்சிகளின் போது இக்கப்பல் நாட்டுக்கு விஜயம் செய்தது. இம்முறை, யுஎஸ்எஸ் டல்ஸா இந்தோ பசிபிக்கில் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.