Breaking News
சிறிலங்காவில் இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய மூவர் கைது
இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகக் குற்றவாளிகளும் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.





