நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: தயாசிறி சுட்டிக்காட்டு
ஹியுமோ குலாேபி தடுப்பூசி கொள்வனவில் இடம்பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சிறைக்கு சென்றார். ஹியுமோ ந குலாேபி மாதிரி கொண்டுவந்த கம்பனி இலங்கையில் பையிலாகியது.
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க வரும் முன்னாள் ஜனாதிபதி நிச்சயமாக கைது செய்யப்படுவார். இவ்வாறு இடம்பெறாவிட்டால் தனது யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் அலைவரிசை சுதா அறிவித்துள்ளார். இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாரளுமன்றத்தில் 21-08-2025 அன்று
இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான விவதாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்காெள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. வாக்குமூலம் வழங்க வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக கைது செய்யப்படுவார் எனவும் அவ்வாறு இடம்பெறாவிட்டால், தான் முன்னெடுத்துவரும் யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் சமுகவலைத்தளம் ஒன்றை முன்னெடுத்துவரும் சுதா தெரிவித்துள்ளார்.
யூடியுப் சுதாவின் இந்த பேச்சு, நீதிபதிகளை, சட்டத்துக்கு மேற்கொள்ளும் அழுத்தமாகும். சட்டத்தின் ஆதிபத்தியத்தை பாதுகாப்பதாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாத்த முறைதான் இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வரக்கூடிய ஒருவரை, அவரை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் யூடியுப் அலை வரிசை நிறுத்துவதாக தெரிவிக்கும் அளவுக்கு யூடியுப் நடத்தக்கூடிய ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து மணித்தியாலக்கணக்கில் உரையாற்றினாலும், அதனை செயற்படுத்த முடியாது என்றால், அதில் பயனில்லை.
அதேநேரம் ஹியுமோ குலாேபி தடுப்பூசி கொள்வனவில் இடம்பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சிறைக்கு சென்றார். ஹியுமோ ந குலாேபி மாதிரி கொண்டுவந்த கம்பனி இலங்கையில் பையிலாகியது. அதன் பிறகு இந்த மருந்தை விநியோகிப்பதை தடுத்து, சுகாதார பிரிவின் என்.எம்.ஆர். இதுதொடர்பில் பரிசோதனை மேற்கொண்டது. அந்த பரிசோதனையில், இது பையில் என்பதை தெரிந்துகொண்டு, இந்த ஹியுமோ குலாேபி மருந்து பொருட்களை வாபஸ்பெறுமாறு தெரிவித்திருந்தது.
ஆனால் வாபஸ்பெறுவதை கைவிட்டு, இந்த மருந்துகளுக்கு இந்தியாவின் கம்பனி ஒன்றில் இருந்து சான்றிதழ் எடுத்துவரப்பட்டது. பொதுவாக இந்திய கம்பனி மருந்து பொருட்களை பரிசோதனை செய்வதற்கு இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில்லை வேறு நாடுகளுக்கே அனுப்பப்படுகிறது. இறுதியில் இந்த அரசாங்கம் கொண்டுவந்த ஹியுமோ குலாேபி தடுப்பூசி ஏற்றியதில் இதுவரை 3பேர் மரணித்துள்ளனர். இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? சிறைக்கு செல்வது யார்? இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கேட்கிறோம் என்றார்.





