பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை ஆணையாளர் கைது
கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





