Breaking News
பெண்களின் சவால்கள் மற்றும் பாகுபாடுகளை சமாளிக்க அவசர நடவடிக்கை எடுக்க பிரதமர் ஹரிணி அழைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பன்னாட்டு மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் மற்றும் பாரபட்சமான நடைமுறைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு இலங்கை மன்ற நிறுவனத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பன்னாட்டு மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய மற்றும் பல்வேறு துறைகளில் சமூக அங்கீகாரத்தைப் பெற்ற பெண்களைப் பாராட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.





