ராஜித்த சேனரத்னவுக்கு விளக்கமறியல்
நீதிபதி லங்கா ஜயரத்ன, அவரை விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய கட்டளை இட்டார்.
அரசுக்கு 262 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதிவரை விலக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் 29-08-2025 அன்று உத்தரவிட்டது.
மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தபோது முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை குறித்த வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில், ராஜித்த சேனாரத்ன ஆஜரான போது, அவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை தொடர்பில் கருத்தில் கொண்ட நீதிபதி லங்கா ஜயரத்ன, அவரை விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய கட்டளை இட்டார்.
அதன்படியே, கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜர்ச் எய்யப்பட்ட போது இவ்வாறு விளக்கமரியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டமப்ர் 3 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன் விசாரணைக்கு ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கும் உத்தரவிட்டார்.





