Breaking News
கலிபோர்னியாவில் இந்து வெறுப்புத் தாக்குதல் அதிகரிப்பு
இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 2024 ஆம் ஆண்டில் 10 ஆக அதிகரித்துள்ளதாகச் சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.
கலிபோர்னியாவில் இந்து விரோத சம்பவங்கள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளன என்று கலிபோர்னியா நீதித்துறை இந்த வாரம் சமர்ப்பித்த வருடாந்திர வெறுப்பு குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 80 பக்க அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்த கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ராப் போன்டா வெளியிட்ட அறிக்கை, "இந்து-வெறுப்புச்" சம்பவங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடுவதைத் தவிர்த்தது.
2023 ஆம் ஆண்டில் ஏழு ஆக இருந்த இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 2024 ஆம் ஆண்டில் 10 ஆக அதிகரித்துள்ளதாகச் சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. இது இந்து அமெரிக்க சமூகத்தின் கவலையைத் தூண்டியுள்ளது.





