இந்திய உயர்ஸ்தானிகர் மத்திய மாகாணத்துக்கு விஜயம்
புயலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு மற்றும் மீட்சி நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவுகளுக்காக மகாநாயக்க தேரர்களிடமிருந்து ஆசிகள் வேண்டப்பட்டிருந்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். தித்வா புலயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் குறித்து இதன் போது ஆவர் விளக்கமளித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களிடமிருந்து உயர் ஸ்தானிகர் நல்லாசிகளைப் பெற்றிருந்தார்.
தித்வா புயலை அடுத்து சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கையில் இந்தியாவால் எவ்வாறான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஆதரவு வழங்கப்பட்டிருந்தது என்பது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு உயர் ஸ்தானிகரால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் புயலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு மற்றும் மீட்சி நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவுகளுக்காக மகாநாயக்க தேரர்களிடமிருந்து ஆசிகள் வேண்டப்பட்டிருந்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மத்திய மாகாணத்துக்கான தனது விஜயத்தின் போது உயர் ஸ்தானிகர், தித்வா புயலினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டதும் 31 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுமான உடத்தவ, நெலும்மால கிராமத்துக்கு சென்றிருந்தார். உயர் ஸ்தானிகர் தனது அனுதாபங்களை இங்கு பகிர்ந்துகொண்டதுடன், பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளால் உயர் ஸ்தானிகருக்கு விவரிக்கப்பட்டது.





