கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் நன்கொடை
எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் இலங்கையை மீளக்கட்டியெழுப்பல் நிதியத்துக்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
குறித்த காசோலையை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் சத்யன்ஜல் பாண்டே மற்றும் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் ( பிரைவெட் லிமிடெட்) பிரதான நிறைவேற்று அதிகாரி முனிஸ் கன்வர் ஆகியோரினால் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, இந்திய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவின் பிரதானி தேவிகா லால்,, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கிருஷான் பாலேந்திர, கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பிரதிநிதிகளான சாபிர் ஹாசிம், மற்றும் ஆனந்தன் நாகசைனு ராஜ் ஆகியோர் இதன்போது கலந்துக் கொண்டனர்.





