சீரற்ற வானிலையால் சுமார் 120 ஓடு தொழிற்சாலைகள் பாதிப்பு
வென்னப்புவை, தங்கொட்டுவ, பன்னல மற்றும் கட்டான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 120 ஓடு தொழிற்சாலைகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 120 ஓடு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓடு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவை, தங்கொட்டுவ, பன்னல மற்றும் கட்டான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 120 ஓடு தொழிற்சாலைகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
மாஓயாவிற்கு அருகில் உள்ள சில ஓடு தொழிற்சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், ஓடு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் களிமண் ஆகியன முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெள்ள அபாயம் காரணமாக, பல தொழிற்சாலைகளில் ஓடுகளை அதிக அளவில் சேமித்து வைத்திருந்த போதிலும், அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





