பிறிதொரு நபரின் கியூ.ஆரை பயன்படுத்துவது சட்டத்துக்கு முரண்
எரிபொருள் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைக்குத் தீர்வாக கோட்டா (க்யூ.ஆர்) முறைமையை அமல்படுத்தப்பட்டது.
பிறிதொரு நபரின் வாகன இலக்கம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி கோட்டா (கியூ.ஆர்) பதிவு செய்வதும், அந்த தரவுகள் ஊடாக எரிபொருள் கொள்வனவு செய்வதும் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.இவ்வாறான முறைகேடுகள் குறித்து முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 26-03-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைக்குத் தீர்வாக கோட்டா (க்யூ.ஆர்) முறைமையை அமல்படுத்தப்பட்டது. நான்கு குழுக்களின் பங்களிப்புடன் கோட்டா முறைமை வகுக்கப்படுகிறது.
இதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் 62,769,11 பேர் கோட்டா முறைமைக்கு பதிவு செய்து எரிபொருளை பெற்றுக்கொண்டுள்ளார்கள். சுமார் 2 இலட்சம் பேர் புதிதாக பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டா முறைமை பதிவின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தற்போது தீர்வளிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், எரிபொருள் கொள்வனவு வீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிறிதொரு நபரின் வாகன இலக்கம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி கோட்டா பதிவு செய்வதும், அந்த தரவுகள் ஊடாக எரிபொருள் கொள்வனவு செய்வதும் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான முறைகேடுகள் குறித்து முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆகவே தற்போதைய இக்கட்டான நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.





