உத்தரகாண்ட் முதல் தமிழ்நாடு வரை: காட்டுத் தீயின் பிடியில் பல மாநிலங்கள்
நீலகிரி மலைப்பகுதி மற்றும் ஆந்திராவின் சேஷாசலம் காடுகள் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் தீ பரவி, வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாகவும் பரந்த வனப்பகுதி அழிவுக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஏற்பட்ட அதிக வெப்பநிலை மற்றும் நீடித்த வறட்சி காரணமாக, உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் காட்டுத் தீ பரவியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக சூழ்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரகாண்டில் உள்ள அடர்ந்தசிர் பைன்காடுகள் தீப்பரவலுக்கு அதிக வாய்ப்புடையவை. பிசின் நிறைந்த உலர் இலைகள் மற்றும் விழுந்த இலைத் துகள்கள் தீ வேகமாக பரவுவதற்கு காரணமாகின்றன. இதன் விளைவாக 150க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள்பதிவாகி, சுமார் 171 ஹெக்டேர்வனப்பகுதி பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நீலகிரி மலைப்பகுதி மற்றும் ஆந்திராவின் சேஷாசலம் காடுகள் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் தீ பரவி, வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாகவும் பரந்த வனப்பகுதி அழிவுக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியாவின் பல பகுதிகளில் தீப்புள்ளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், இது சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பல்வகைமை மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





