‘சனாதன ஒழிப்பு’ குறித்து மீண்டும் உதயநிதி ஸ்டாலின் கருத்து
“மக்களைப் பிரித்த சனாதனத்தை ஒழிக்க வேண்டும்,” என உதயநிதி ஸ்டாலின் அவையில் தெரிவித்தார்.
சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற கருத்தை மீண்டும் முன்வைத்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்வினைகள் எழுந்துள்ளன.
சட்டமன்றக் கூட்டத் தொடக்க நாளில், 2026 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே அவர் இந்த கருத்தை பதிவு செய்தார்.
“மக்களைப் பிரித்த சனாதனத்தை ஒழிக்க வேண்டும்,” என உதயநிதி ஸ்டாலின் அவையில் தெரிவித்தார்.
அவர் முன்னதாகவும் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். அந்த கருத்துகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, அவர் சட்டரீதியான சிக்கல்களையும் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அவையில் இருந்த முதல்வர் சி. ஜோசப் விஜய், இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





