கொழும்பு – காங்கேசன்துறை யாழ்தேவி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்
யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரையிலான புகையிரத சேவை செவ்வாய்,புதன் மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இடம்பெறும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரையிலான யாழ் தேவி புகையிரத சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரையிலான புகையிரத நிலையம் வரையிலான யாழ்தேவி புகையிரத சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் மாத்திரம் இடம்பெறும்.
அதேபோல் யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரையிலான புகையிரத சேவை செவ்வாய்,புதன் மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இடம்பெறும்.
இந்த புகையிரதத்தில் நான்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசன முன்பதிவுகளை https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளம் ஊடாகவும், புகையிரத நிலையங்கள் ஊடாகவும் மேற்கொள்ள முடியும்.





