சிங்கப்பூரின் தொழில்துறை புத்தாக்க மாவட்டத்திற்கு சஜித் களவிஜயம்
நவீன நகர்ப்புற-தொழில்துறை திட்டமிடலுக்கான முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில், குடியிருப்பு வசதிகள், நிலத்தடி விநியோக வலையமைப்புகள் மற்றும் மேம்பட்ட வடிகால் அமைப்புடன் இந்த மாவட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டுக்கு கல்வி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிங்கப்பூரின் அடுத்த தலைமுறை தொழில்துறை புத்தாக்க மாவட்டத்திற்கு நேற்று கள ஆய்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் அடுத்த தலைமுறை தொழில்துறை புதுமை பூங்காவான ஜூரோங் புத்தாக்க மாவட்டமானது, ஜூரோங் புத்தாக்க மாவட்டம் என்பது மேம்பட்ட உற்பத்தி மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான தொழில்களை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு மையமாகும்.
ஜூரோங் புத்தாக்க மாவட்டம் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இரண்டிற்கும் ஏற்ற உட்கட்டமைப்பு வசதிகளால் ஆற்றல் பெற்ற தொழில்துறை மற்றும் அலுவலக இடங்களை ஒருங்கிணைத்து, உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கான ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.
நவீன நகர்ப்புற-தொழில்துறை திட்டமிடலுக்கான முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில், குடியிருப்பு வசதிகள், நிலத்தடி விநியோக வலையமைப்புகள் மற்றும் மேம்பட்ட வடிகால் அமைப்புடன் இந்த மாவட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் முக்கிய கவனம் பகிரப்பட்ட வசதிகள்,ஸ்மார்ட் உற்பத்தி சூழல்கள் மற்றும் தொழில்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கிடையே நெருக்கமான தொடர்புகளுடன் புதிய தொழில் தொடங்குதலை ஊக்குவிப்பதாகும். கவனமாக திட்டமிடப்பட்ட தொழில்துறை வலயங்கள் திறன், நிலைத்தன்மை மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதத்தை இந்த மேம்பாடு காட்டுகிறது.
இந்த ஆய்வுப் பயணத்தின் போது, போட்டித்தன்மை மற்றும் நிலையான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறை இடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வாழ்க்கை தீர்வுகள் பயன்படுத்தப்படும் முறையை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கவனித்தார். மேலும் எதிர்காலம் நோக்கிய தொழில்துறை மேம்பாட்டு மாதிரிகள் குறித்த மதிப்புமிக்க புரிதலையும் இங்கே பெற முடிந்தது.





