பஞ்சாயத்து தேர்தல் தகுதிக்காக பெற்ற மகளை கொன்ற வழக்கில் தந்தை கைது
முடி வெட்டுபவரான கொண்டமாங்ரே, மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட தகுதி பெற முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவின் நாண்டெட் மாவட்டத்தில், ஏழு வயது சிறுமியை அவரது தந்தை கொலை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுக்குள்ளானவர் பண்டுரங்க் கொண்டமாங்ரே.
வரவிருக்கும் சர்பஞ்ச் தேர்தலில் போட்டியிடும் அரசியல் நோக்கமே இந்தக் கொலைக்கு காரணம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். தொழிலால் முடி வெட்டுபவரான கொண்டமாங்ரே, மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட தகுதி பெற முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சட்டத்தின் படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. கொண்டமாங்ரேக்கு மூன்று குழந்தைகள் இருந்ததால், தகுதி பெறுவதற்காகத் தனது மகளை கொலை செய்ததாக காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பண்டுரங்க் கொண்டமாங்ரே மற்றும் தற்போதைய சர்பஞ்ச் கணேஷ் ஷிந்தே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





