அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை 104 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
இந்த வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறு கயந்த கருணா திலக்க எம்பி சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை 104 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டது பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் 06-02-2026 அன்று இடம்பெற்றது.
விவாதத்தின் முடிவில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போதே பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது..
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க ஆதரவாக 106வாக்குகள் அளிக்கப்பட்டன.
அதேவேளை எதிராக 2 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டத்தை நீடிக்க அங்கீகாரமளிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறு கயந்த கருணா திலக்க எம்பி சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதன் எம்பி எதிர்த்து வாக்களித்தார்.





