அவசரகால நிலைமை நீட்டிப்பு - விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரம்
ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.எஸ்.குமநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக அவசரகால நிலைமை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.எஸ்.குமநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுக் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான( 40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் பாகம் 2 இன் ஏற்பாடுகள் 2026.03.28 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.





