ஜனாதிபதியை வரவேற்ற தோட்ட மக்கள் நன்றி தெரிவிப்பு
போதைப்பொருளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள 'முழு நாடும் ஒன்றாக' தேசியத் திட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.
“போராட்டம், பணிப்புறக்கணிப்பு இல்லாமல் சம்பளத்தை அதிகரித்தீர்கள். நீங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு ஜனாதிபதியை வரவேற்ற ரதெல்ல சமர்செட் தோட்ட மக்கள் சம்பள அதிகரிப்புக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
போதைப்பொருளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள 'முழு நாடும் ஒன்றாக' தேசியத் திட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக நுவரெலியாவுக்கு சென்று கொண்டிருக்கும் போது ஜனாதிபதி நுவரெலியா நானுஓயா, ரதெல்ல சமர்செட் தோட்டத்து கொழுந்து மலைக்கு நேரடியாக சென்று, கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த தாய்மார்களிடமும், பெண்களிடம் சுமுகமாக கலந்துரையாடினார்.
கொழுந்து மலைக்கு வந்த ஜனாதிபதியை தொழிலாளர்கள் பொன்னாடை போர்த்தி, அமோகமாக வரவேற்றனர். பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதற்கு அம்மக்கள் ஜனாதிபதிக்கு நன்றித் தெரிவித்தார்கள்.
சம்பளம் அதிகரிக்கப்பட்டதற்கும், கொழுந்து மலைக்கு ஜனாதிபதி வந்ததையும் பற்றிக் குறிப்பிட்ட பொதுமக்கள் 'கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்புக்காக நாங்கள் மாதகணக்கில் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இந்த முறை தான் எவ்வித போராட்டங்களோ, அல்லது பணிப்புறக்கணிப்போ இல்லாமல் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தான் முதன் முறையாக கொழுந்து மலைக்கு வந்து எங்களுடன் கலந்துரையாடினார்கள். ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை உள்ளது', ஜனாதிபதிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டார்கள்.இதன்போது கூடியிருந்த தொழிலாளர்களுடன் உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி நுவரெலியா நகருக்கு சென்று போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிகழ்வில் கலந்துக் கொண்டார்.





