முழுநாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கை இதுவரை 21 வயதுக்குட்பட்ட 7,300 இளைஞர்கள் கைது
இந்தத் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 2 இலட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழுநாடும் ஒன்றாக எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய நாடளாவிய ரீதியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, 21 வயதுக்குட்பட்ட சுமார் 7,300 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முழுநாடும் ஒன்றாக எனும் நடவடிக்கைக்கமைய இதுவரை 21 வயதுக்குட்பட்ட சுமார் 7,300 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்களில் 21 வயதுக்குட்பட்ட சுமார் 150 யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். அத்துடன், இந்தத் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 2 இலட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இல்லாமல் செய்தல், போதைப்பொருட்களுக்கான தேவையை குறைப்பது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில், தற்போதுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விசேட நடவடிக்கைகளின் போது கஞ்சா உள்ளிட்ட 15 ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.





