ஹேமரத்ன தேரரின் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது - நிட்டம்புவ பிரதான பொலிஸ் பரிசோதகர்
முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிரான இந்த வழக்கு அநுராதபுர நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் கடந்த 26ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 15 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில், சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது மரபனு பரிசோதனை அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம். அநுர குணவர்தன நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிரான இந்த வழக்கு அநுராதபுர நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் கடந்த 26ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதான பொலிஸ் பரிசோதகர், இரண்டாவது மரபனு பரிசோதனை அறிக்கையும் விரைவில் கிடைக்கப் பெறவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேற்படி வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, முதற்தடவையாக நீதிமன்றில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி கேஷானி விஜேசிங்க விளக்கமளிக்கையில், பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ச்சிளாக அவதானம் செலுத்திவருவதுடன், நேரடி மேற்பார்வையுடன் அவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க , இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து தமது அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதற்கமைய தற்போது வெளியிடப்பட்டுள்ள முதலாவது மரபனு பரிசோதனை அறிக்கையின் பிரதியொன்றைத் தமது அதிகார சபைக்கு பெற்றுத்தருமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.





