இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சி பாராட்டத்தக்கது - சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் உறுதி
வர்த்தகம்,முதலீடுகளை ஈர்த்தல், சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துதல், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் ஏற்றுக்கொண்டு, இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உறுதியளித்தனர்.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 30-06-2026 அன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, எதிர்காலத்திலும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும்,நீடித்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்த இலங்கை தனது பயணத்தைத் தொடர்ச்சியாக மீள்நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர், வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட உலகளாவிய போக்குகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய துறைகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், புற அதிர்வுகளுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையில் நாட்டின் பின்னடைவைத் தாங்கும் திறனைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் புரிந்து கொண்ட பிரதிநிதிகள், இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
வர்த்தகம்,முதலீடுகளை ஈர்த்தல், சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துதல், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியும் சமூகப் பாதுகாப்பும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்றும், இவை தனித்தனியாக வெற்றிபெற இயலாதவை என்றும் குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சமநிலையை அடைவதற்கு, குறிப்பாகக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு போன்ற துறைகளில் வலுவான பொது உட்கட்டமைப்பு தேவை என்பதையும், பயனுள்ள சேவை வழங்கலைப் பாதிக்கும் தற்போதைய மனிதவளப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜய்ன் சாண்ட்ரா, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பபஜேர்ஜியோ, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி , பிரதமரின் செயலாளர் , மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே. எம். ஏ. என். தௌலகல, மத்திய வங்கியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.





