கனடிய உயர்ஸ்தானிகருடன் மனோகணேசன் சந்திப்பு
தொழிலாளர் தொகை ஒரூ இலட்சம் பேர் மட்டுமே. தற்போதைய நிலையில் இன அடையாளம் கொண்ட 15 இலட்ச சிறுபான்மை தேசிய இனமாக மலையக சமூகம் வளர்ந்துள்ளது.
மலையக தமிழரின் அனைத்து பிரச்சினைகளையும், தொழிலாளர் பிரச்சினையாக சுருக்குவது முறையற்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.
கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்டினை, கனடா இல்லத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுகுழு சந்தித்து உரையாடியது. இதன்போது அரசியல் குழு உறுப்பினர்கள், பரணீதரன், பாரத் அருள்சாமி, ஆகியோரும் கலந்து கொண்ட இச்சந்திப்பு பற்றி கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;
இறுதி கட்ட போர் காலத்தில், கொழும்பு தெருக்களில் திரிந்த வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிரான எனது போராட்டத்தின் போது, எனக்கு தஞ்சம் தந்த பழைய இல்லம், கொழும்பில் உள்ள கனடா இல்லமாகும்.
தற்போதைய நிலையில் எமது கூட்டணியின் நலிவுற்ற மலையக மக்கள் சார்ந்த போராட்டம் தொடர்பில், எடுத்து கூறினோம். மலையக தமிழரில், கூலி தொழிலாளர் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. ஆகவே மலையக தமிழரின் அனைத்து பிரச்சினைகளையும், தொழிலாளர் பிரச்சினையாக சுருக்குவது முறையற்றது.
தொழிலாளர் தொகை ஒரூ இலட்சம் பேர் மட்டுமே. தற்போதைய நிலையில் இன அடையாளம் கொண்ட 15 இலட்ச சிறுபான்மை தேசிய இனமாக மலையக சமூகம் வளர்ந்துள்ளது.
தற்போது முழுமையற்ற குடியுரிமை; நவீன அடிமைதன அறிகுறிகள்; ஆகிய அடிப்படை கவலைக்குரிய நிலைமைகளில், நமது மக்கள் தோட்ட பிரதேசங்களில் வாழ்கிறார்கள். இந்த கருத்துகளை நாம் எடுத்து கூறியதை தூதர் தெளிவாக புரிந்து கொண்டார்.
கனடிய-உலகளாவிய உதவி கரங்கள், மனித உரிமை கண்காணிப்பு, ஆதியன நலிவுற்ற நமது மக்களையும் அடைய வேண்டும். அதை கனடா உறுதி படுத்த வேண்டுமென வலியுறுத்தினோம் என்றார்.





