சதாரண மக்கள் வாகனங்களை கொள்வனவு செய்யமுடியாத அளவுக்கு விலைகள் அதிகரிப்பு
நிதியமைச்சினால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 2026.05.18ஆம் திகதி முதல் கடன்பற்று பத்திரம் திறக்கும் சகல வாகனங்களுக்கும் அமல்படுத்தப்படும் வகையில் இந்த 50 சதவீத வரி அமல்படுத்தப்படவுள்ளது.
50 சதவீத புதிய மேலதிக வரி அமல்படுத்தலைத் தொடர்ந்து வாகன இறக்குமதிக்கான சகல வரிகளும் உயர்வடையும். சாதாரண மக்கள் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு வாகனங்களின் விலை உயர்வடையும். புதிய வரி தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அல்லது வரி வீதத்தை குறைக்க வேண்டுமென வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதி செயலாளர் ரொஷான் ரொட்றிகோ தெரிவித்தார்.
கொழும்பில் 16-05-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, டொலர் மற்றும் பிரித்தானியாவின் பவுன் ஆகிய நாணய அலகுகளின் பெறுமதி உயர்வு மற்றும் சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு வரி 2.5 சதவீதத்தால் உயர்வு ஆகியவற்றின் பின்னணிக்கு மத்தியில் வாகன இறக்குமதியின் போது சுங்க வரிக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது
நிதியமைச்சினால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 2026.05.18ஆம் திகதி முதல் கடன்பற்று பத்திரம் திறக்கும் சகல வாகனங்களுக்கும் அமல்படுத்தப்படும் வகையில் இந்த 50 சதவீத வரி அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய சகல வாகனங்களினதும் விலை சடுதியாக உயர்வடையும்.
புதிய மேலதிக வரிக்கமைய மிரா ரக காரின் விலை 5 முதல் 6 இலட்சத்தாலும், வெகனார் ரக காரின் விலை 7 முதல் 8 இலட்சத்தாலும், வெசல் ரக காரின் விலை 17 இலட்சம் முதல் 18 இலட்சத்தாலும், யாரிஸ் ரக வாகனத்தின் விலை 14 இலட்சம் முதல் 15 இலட்சத்தாலும், ரேஸ் ஹைபிரிட் ரக காரின் விலை 12 இலட்சம் முதல் 13 இலட்சத்தாலும், ப்ரோடோ ரக காரின் விலை 35 இலட்சம் முதல் 40 இலட்சத்தாலும் உயர்வடையும்.
50 சதவீத புதிய மேலதிக வரி அமல்படுத்தலைத் தொடர்ந்து வாகன இறக்குமதிக்கான சகல வரிகளும் இனி உயர்வடையும்.சாதாரண மக்கள் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு வாகனங்களின் விலை உயர்வடையும். புதிய வரி தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அல்லது வரி வீதத்தை குறைக்க வேண்டும் என்றார்.





