ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் மன்னார் இளைஞன் உயிரிழப்பு நால்வர் காயம்: மோட்டார் சைக்கிள் மீட்பு
துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் வருகை தந்திருந்த மோட்டார் சைக்கிளும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சலுனில் பணிபுரந்த சிலாவத்துறை சேர்ந்த உயிரிழந்த இளைஞர் முஜாஹித் முஹம்மது சஹ்ரான் மற்றும் காயமடைந்துள்ள 19 வயதுடைய இளைஞர் ஆகியோரை இலக்குவைத்தே இந்த துப்பகாக்கிச் சூடு நடத்தப்பட்டடிருக்கலாம் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் வருகை தந்திருந்த மோட்டார் சைக்கிளும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஜிந்துப்பிட்டி கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 14-02-2026 அன்று இரவு 7.50 மணியளவில் சலூன் ஒன்றிலிருந்த குழுவினர் மீது இனந்தெரியாத சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நபர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 20 வயதுடைய மன்னார், சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரான் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் கொழும்பில் பணிபுரிந்து வருபவர் எனவும், முடிவெட்டுவதற்காக சலூனுக்குச் சென்றிருந்த போதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு17, 19, 27 மற்றும் 28 வயதுடைய சிலாவத்துறை, கிராண்ட்பாஸ் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த நால்வர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களில் ஒருவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி குற்றச்செயலுக்காக சந்தேகநபரால் ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவர் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்தமை அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சலூன் நிலையத்தின் கதவருகே நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சுமார் 17 முறை துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து சென்ற சந்தேகநபர்கள், பின்னர் கொட்டாஞ்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர், குறித்த மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிலாவத்துறை சேர்ந்த 19, 20 வயதுடைய இரு இளைஞர்களை இலக்குவைத்தே துப்பகாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு பணிப்பரிபவர்கள், ஏனையோர் அங்கு முடிவெட்டிவதற்காக வந்தவர்களே . சந்தேகநபர் சலுன் கதவை திறக்காமலே துபாக்கியால் சுட்டுள்ளார் ஆகையால் மேற்படி இரு இளைஞர்களை இலக்குவைத்து இது மேற்கொள்ளப்பட்டிருகடகலாம் என சந்தேகிக்கப்படுவதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். மேலும் கடற்கரை பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





