11 ஆவது இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டம் இன்று
இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ நாட்டை வந்தடைந்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ ஆகியோரின் இணைத்தலைமையில் 11 ஆவது இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கில் மூண்டிருக்கும் போருக்கு மத்தியில் கடந்த வாரம் ரஷ்ய வலுசந்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் நாட்டுக்கு வருகைதந்திருந்துடன், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ நாட்டை வந்தடைந்தார்.
அதற்கமைய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் கலந்தாராய்வுக் கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுலா, வலுசக்தி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்பு மற்றும் சமகால பிராந்திய நிலைவரங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.





