பூனைக் குட்டிகளை கொடுமைப்படுத்திய மிசிசாகா இளைஞர் கைது
புலனாய்வாளர்கள் ஏப்ரல் 23 அன்று விலங்கு நலச் சேவைகளுடன் ஒரு தேடல் ஆணை பெற்றுக்கொண்டு 38 வயதான மிசிசாகா இளைஞரை கைது செய்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பீலில் உள்ள விலங்கு நலச் சேவைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி பூனைக்குட்டிகள் "துன்பகரமான சூழ்நிலையில்" விற்கப்பட்டதாகவும், அவர்களின் புதிய வீடுகளுக்கு வந்த பின்னர் காயங்களால் இறந்ததாகவும் பல சம்பவங்கள் குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தன என்று பீல் பிராந்தியக் காவல்துறையினர் ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.
புலனாய்வாளர்கள் ஏப்ரல் 23 அன்று விலங்கு நலச் சேவைகளுடன் ஒரு தேடல் ஆணை பெற்றுக்கொண்டு 38 வயதான மிசிசாகா இளைஞரை கைது செய்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் 57பூனைக்குட்டிகள் மற்றும் எட்டுப் பூனைகளும் மீட்கப்பட்டு விலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது விலங்குகளுக்கு தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தியதாக 134 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.