ஐரோப்பிய ஒன்றியக்குழுவினரிடத்தில் சஜித்தால் ஆறம்ச திட்டம் முன்வைப்பு
கடன் வலையில் சிக்காமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் நாட்டை மீட்டெழுப்ப 6 அம்சங்களைக் கொண்ட "கடன் அல்லாத" திட்டத்தை முன்வைத்தார்.
தித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் முக்கியமான பொருளாதார சவால்கள் குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 11-02-2026 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை கொழும்பில் சந்தித்தார்.
தித்வா சூறாவளியால் இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதால், நாடு பாரம்பரிய கடன் அடிப்படையிலான மீட்சியை மேற்கொள்ள முடியாது என்பதால், தேசிய மீள்தன்மைக்கான பரந்த மூலோபாயத்தை முன்வைத்தார்.
கடன் வலையில் சிக்காமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆறு அம்சங்களைக் கொண்ட கட்டமைப்பை முன்வைத்தார். இதில் பொருளாதார சீர்திருத்தங்கள் ஜனநாயக சீர்திருத்தங்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அவ்வாறே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த முக்கிய முன்மொழிவுகளாக கடன் பெறுவதற்கு அல்ல, உதவிகளைப் பெறுவதற்கான நடவடிக்கை. அதாவது சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரினார். பேரழிவால் ஏற்பட்ட சேத இடைவெளியை நிரப்ப மானியங்கள் மற்றும் கடன் அல்லாத நிதியுதவியை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
வர்த்தக நெகிழ்வுத்தன்மை. அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் அத்தியாவசிய வர்த்தக பங்காளியாக அங்கீகரிக்கப்பட்டு, ஜி.எஸ்.பி.பிளஸ் இணக்கம் மற்றும் "தோற்ற விதிகள்" தொடர்பான தற்காலிக நெகிழ்வுத்தன்மையை கோரினார். இது சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஆடை மற்றும் விவசாயத் துறைகள் மீண்டும் முந்தைய நிலைக்கு வர வாய்ப்பளிக்கும்.
சர்வதேச நாணய நிதிய கட்டமைப்பிற்குள் "பேரிடர்-செலவுகளுக்கு" ஒதுக்கீடுகள் அவசியமாகும். தற்போது கடுமையான அபாயத்தை எதிர்கொள்ளும் 275,000 குழந்தைகள் மற்றும் மில்லியன் கணக்கான குடிமக்களை பாதுகாப்பதற்கு இது அவசியமாகும்.
பசுமை வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காலநிலை-எதிர்ப்பு தொழில்துறை வலயங்களை கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் "உலகளாவிய நுழைவாயில்" முன்னெடுப்பைப் பயன்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுவனமயமாக்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சர்வதேச தரநிலை சட்டங்களுடன் மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலைக்காப்பு சட்டத்தைத் திருத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
இறுதியாக அரசின் கடன் பெறும் திறன் முடிவடைந்து பாரம்பரிய வழிகள் மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய நம்பிக்கையை மீட்டெடுக்க ஒரே வழி வெளிப்படையான, ஊழல் இல்லாத மீட்சி பொறிமுறை என்று கூறினார். எனவே சர்வதேச நன்கொடையாளர்களிடம் இருந்து மட்டுமல்ல, இறுதியில் தங்கள் பங்களிப்பை மதிக்கும் தாய்நாட்டுக்கு உதவ காத்திருக்கும் நமது சொந்த வெளிநாட்டு சமூகத்திடம் இருந்து அத்தியாவசிய ஆதரவைப் பெற உலகம் நம்பும் கட்டமைப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.





