கொள்கை நிலைத்த இராஜதந்திரத்தை முன்னெடுக்க தயாராகவுள்ளோம்: பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, இம்மாநாடு வழக்கமான இராஜதந்திர அல்லது அரசியல் நிகழ்வு அல்ல,சட்டம், வரலாறு, கலாசாரம்,நினைவு, நீதி மற்றும் இராஜதந்திரம் ஒன்றிணையும் முக்கியமான உரையாடலாகும்.
இலங்கையின் மரபுடைமை தொடர்பான விடயங்களில்,சர்வதேச பங்குதாரர்கள்,அறிஞர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உரையாடல்,ஆராய்ச்சி, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கொள்கைநிலைத்த இராஜதந்திரத்தை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற 'யாருடைய சட்டம்: ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காலனித்துவ காலத்தில் இடம்பெயர்க்கப்பட்ட கலாசார மரபுடைமை தொடர்பான கேள்விகளை ஆராய்வதற்காக, இம்மாநாடு சட்ட அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகத் துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைத்த முக்கியமான தளமாக அமைந்தது. சட்ட மற்றும் வரலாற்று ஆய்வு, கலாசார நினைவு மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த மீளளிப்பு ஆகியவை மாநாட்டின் முக்கிய கவனப் பகுதிகளாக இருந்தன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் பிரதி தூதுவர் இவான் ருட்ஜென்ஸ்,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், உயர் நீதிமன்ற நீதியரசர் நீதியரசர் யசந்த கோதாகொட, வ்ரிஜே யுனிவர்சிடேட் ஆம்ஸ்டர்டாமின் பேராசிரியர் வௌட்டர் வெரார்ட், மாநாட்டு இணைத் தலைவர் பேராசிரியர் நாஸிமா கமர்தீன், கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பீடத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா, கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மற்றும் மாநாட்டு இணைத் தலைவர் கலாநிதி தர்ஷி தோரதெனிய உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, இம்மாநாடு வழக்கமான இராஜதந்திர அல்லது அரசியல் நிகழ்வு அல்ல,சட்டம், வரலாறு, கலாசாரம்,நினைவு, நீதி மற்றும் இராஜதந்திரம் ஒன்றிணையும் முக்கியமான உரையாடலாகும்.
காலனித்துவ காலத்தில் இடம்பெயர்க்கப்பட்ட கலாசாரப் பொருட்கள் வெறும் அருங்காட்சியகப் பொருட்களாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. அவை நாடுகளின் மற்றும் மக்களின் உயிருள்ள மரபுடைமை, அடையாளம் மற்றும் வரலாற்று நினைவின் பகுதியாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் கலாசார மீளளிப்பு அணுகுமுறை கொள்கை நிலைத்த, ஆதார அடிப்படையிலான மற்றும் இராஜதந்திரமானதாக இருக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் மோதலாக அல்லாது,ஆய்வு, பரஸ்பர புரிதல், பொறுப்பான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வரலாற்றுடன் நேர்மையான கூட்டாண்மை உருவாக்கும் வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும்.
இலங்கையின் நாகரிக மரபுடைமையையும், திருகோணமலையுடன் தனது தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. மரபுடைமை அருங்காட்சியகங்களில் மட்டும் அல்லாது,நிலப்பரப்புகள், கடற்கரைகள், நினைவுகள் மற்றும் மக்கள் தாங்கி நிற்கும் கதைகளிலும் வாழ்கிறது. இலங்கையின் கலாசார மரபுடைமை நலன்களை முன்னெடுக்க சட்டத் தெளிவு,நிறுவன ஒருங்கிணைப்பு, பொதுக் கல்வி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியமாகும். நினைவை முறையாகவும், ஆராய்ச்சியை கொள்கையாகவும், கூட்டாண்மையாகவும் மாற்ற வேண்டும். இலங்கை தனது நாகரிகத்தின் காவலராக நிலைக்க வேண்டும்.
இலங்கையின் மரபுடைமை தொடர்பான விடயங்களில்,சர்வதேச பங்குதாரர்கள்,அறிஞர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உரையாடல்,ஆராய்ச்சி, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கொள்கைநிலைத்த இராஜதந்திரத்தை முன்னெடுக்க வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு உறுதியாக உள்ளது என்றார்.





