மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்
தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) உலக நடப்புகள் மற்றும் அரசியல் நிலவரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார்.
இலங்கையின் சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் வயது மூப்பு காரணமாக 17-05-2026 அன்று காலமானார். இத்தகவலை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்து பல தசாப்தங்களாக ஆழமான, காத்திரமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த அவர், சர்வதேச அளவில் பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்டவராவார். தனது தனித்துவமான எழுத்துக்களின் மூலம் உலகளாவிய ரீதியில் அவர் புகழ்பெற்றிருந்தார்.
அவர் 'தி ஐலண்ட்' (The Island), 'டெய்லி மிரர்' (Daily Mirror), 'டெய்லி எஃப்.டி' (Daily FT) உள்ளிட்ட முன்னணி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாக ஊடகவியாலராக பணியாற்றி வந்ததோடு, தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) உலக நடப்புகள் மற்றும் அரசியல் நிலவரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார்.
அன்னாரின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த விபரங்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





