யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சி - மஹிந்த ராஜபக்ஷ
யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது.இன்று பிளவுபடாத ஒரேநாடு உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் 18-05-2026அன்று இடம்பெற்றது. இந்நிழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த வெற்றி நாளை ஒருபோதும் மறக்க கூடாது.
இன்று தனி நாடு உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது.ஆனால் மக்கள் நல்லிணக்கமாகவுள்ளார்கள். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.
யுத்த வெற்றிக்காக உயிர் தியாகம் செய்த வீரர்கள் என்றும் நினைவுகூரப்பட வேண்டும். அவர்களால் தான் இன்று நாடு ஐக்கியமாகவுள்ளது. இது பாரியதொரு வெற்றியாகும் என்றார்.





