ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் தேசிய மட்டத்தில் பணவீக்கம் உயர்வடையும் - பேராசிரியர் வசந்த அதுகோரல
டொலரின் பெறுமதி உயர்வடைந்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியும்.இதனால் தேசிய மட்டத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வடையும்.
டொலரின் பெறுமதி உயர்வடைந்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியும்.இதனால் தேசிய மட்டத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வடையும்.அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டின் தொழிற்றுறை மற்றும் சேவை துறைகள் பாதிக்கப்படுவதுடன், மக்களின் இயல்புவாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும். வாகன இறக்குமதியின் போதான சுங்க வரியை மேலதிகமாக 50 சதவீதத்தால் தற்காலிகமாக அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டுக்குள் வரும் டொலர் அலகின் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், நாட்டை விட்டு வெளியேறும் டொலரின் பெறுமதி அதிகமாக காணப்படுகிறது.
இறக்குமதி செலவுகள் உயர்வடைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லும் டொலரின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் 03 மாதகாலத்தில் மாத்திரம் இறக்குமதி செலவுகள் 4.48 பில்லியன் டொலராக காணப்பட்டது.
2026 முதல் 03 மாத காலப்பகுதியில் மாத்திரம் இறக்குமதி செலவு 5.77 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது. இந்த மூன்று மாதகாலத்தில் சந்தை பண்ட பற்றாக்குறை 2.3 டொலராக காணப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கு மாத்திரம் 1.6 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு முதல் 03 மாதகாலப்பகுதியில் மாத்திரம் 460 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் நாட்டில் வாகன பற்றாக்குறை காணப்படுகிறதா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். வாகன இறக்குமதிக்கான வரியை தற்காலிகமாக அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
டொலரின் பெறுமதி உயர்வடைந்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியும்.இதனால் தேசிய மட்டத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வடையும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டின் தொழிற்றுறை மற்றும் சேவை துறைகள் பாதிக்கப்படுவதுடன், மக்களின் இயல்புவாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும்.
வெளிநாட்டு கையிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். வாகன இறக்குமதியின் போதான சுங்க வரியை மேலதிகமாக 50 சதவீதத்தால் தற்காலிகமாக அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.





