வனவாசல பகுதியில் புகையிரதம் தடம் புரண்டது - விபத்துக்கு காரணமான இரு சந்தேக நபர்கள் கைது
திருடிய ஆணிகளை அந்த நபர் அப்பகுதியில் உள்ள இரும்புக்கடையில் விற்பனை செய்துள்ளதுடன், அந்த கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்காவெலவில் இருந்து களுத்துறை தெற்கு நேற்று அதிகாலை புறப்பட்ட புகையிரதம் வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து வைத்திசயாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை அகற்றிய நபரும், அவற்றை பெற்றுக்கொண்ட இரும்புக் கடையின் உரிமையாளரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16-05-2026அன்று அதிகாலை 03.25 மணியளவில் பொல்காவெல புகையிரத நிலையத்தில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் காலை 05.18 மணியளவில் வனவாசல புகையிரத நிலையத்தை வந்தடைந்து, காலை 05.20 மணியளவில் களுத்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த மறுகணமே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
புகையிரதத்தின் நடுபகுதி பயணிகளுடன் முழுமையாக தடம் புரண்டது. இதன்போது புகையிரதத்தின் ஏனைய வகுப்பில் இருந்த பயணிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து விபத்துக்குள்ளான வகுப்பில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். 12 பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
புகையிரத தண்டவாளத்தின் மோட்டார் பகுதியில் ரொடிஸ் ஆணியை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளிகளை பரீட்சித்ததன் பின்னர் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் போதைப்பொருள் பெறுவதற்காக தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை திருடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருடிய ஆணிகளை அந்த நபர் அப்பகுதியில் உள்ள இரும்புக்கடையில் விற்பனை செய்துள்ளதுடன், அந்த கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதுடன், பிரதான புகையிரத பாதையின் புகையிரத சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் ஒற்றை வழிபாதையில் கீழ் மற்றும் மேல் பகுதிக்கான புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சேதமடைந்த புகையிரத பாதையை புனரமைப்பதற்கான பணிகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளது.





