மைத்திரிபாலவின் அலுவலகத்துக்குள் பிரவேசித்தவர்களை விடுவிக்க உத்தரவு
இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 140,300, 315 மற்றும் 314 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தலா 7 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெலிகந்தையில் அமைந்திருந்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது ஆதரவாளர்களைத் தாக்கி, காயப்படுத்தி,கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பிரதிவாதிகளை அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுவிக்குமாறு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி துலானி வீரதுங்க உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஜனவரி 11 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் பொலன்னறுவை மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட வெலிகந்த பகுதியில் சட்டவிரோத கூட்டமொன்றின் உறுப்பினர்களாக இருந்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 140,300, 315 மற்றும் 314 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தலா 7 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவ்வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.
அதற்கமைய, சம்மந்தப்பட்ட பிரதிவாதிகளை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் பி. ஏ. ருக்மன் பிரதீப்,எம். எஸ். பிரதீப் மஞ்சுள,எச். எம். தனபால, பி. எம். அசங்க நுவன், பி. ஏ. சாமர அசங்க பிரேமசிறி மற்றும் பி. ஏ. விக்கும் பிரபாத் பிரேமசிறி ஆகிய பிரதிவாதிகள் ஆவர்.ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெலிகந்தையில் அமைந்திருந்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகத்துக:குள் அத்துமீறி நுழைந்து,அவரது ஆதரவாளர்களைத் தாக்கி,காயப்படுத்தி, கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பிரதிவாதிகளை அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுவிக்குமாறு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி துலானி வீரதுங்க நேற்று (25) உத்தரவிட்டார்.





