236 நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கை
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 236 நபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிக்கைபிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச பொலிஸாரின் தொடர்ச்சியான உதவிகளுடன் இதுவரை மொத்தம் 42 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





