அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது - சம்பிக்க ரணவக்க
பிரபாகரனுக்கு பிறகு விடுதலை புலிகளின் தலைவர் என தெரிவித்துவந்த, குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்கு கீழ் இருக்கிறார்.
அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை. மாறாக அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் காரணமாகவே அவரை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
திருடர்களை கைதுசெய்வதாக தெரிவித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் 31-08-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், திருடர்களை கைதுசெய்யும் அரசாங்கத்தின் வேவைத்திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசியல் நாடகத்துக்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம். திருடர்களை கைதுசெய்வதுபோல், நாட்டை வங்குராேத்தாகியவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது நாடு விடுதலை புலிகளின் யுத்தத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது ஆனால் 87,88 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் 30 வருட யுத்தம் காரணமாக எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறி இருக்கும். ஆனால் இவ்வாறு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திய யாருக்காவது வழக்குகள் இருக்கிறதா? மக்கள் விடுதலை முன்னணி யாருக்காவது வழக்கு இருக்கிறதா என கேட்கிறோம்.
பிரபாகரனுக்கு பிறகு விடுதலை புலிகளின் தலைவர் என தெரிவித்துவந்த, குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்கு கீழ் இருக்கிறார்.அவருக்கு எதிராக ஒரு வழக்கும் இல்லை. ஆனால் விடுதலை புலிகளின் சாதாரண உறுப்பினர்கள் சிலரே இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் அரசாங்கம் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜின் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்துவருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 6 வருடங்கள் கடந்த பின்னர் அவர் தனது பெயரை அலெக்சாண்டர் என மாற்றிக்கொண்டிருப்பதால், அவரை நாட்டுக்கு அழைததுவருவதில் சட்ட சிக்கல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
ஆனால் அர்ஜுன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு கொண்டுவருவதற்கு சிங்கப்பூரில் எந்த சட்ட சிக்கல்களும் இல்லை. அதனால்தான் அரசாங்கம் அவரை கொண்டுவர முடியாமல் இருப்பதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. மாறாக பிணைமுறி கணக்கை அதிகரிப்பதற்கு தனக்கு எவ்வாறு அழுத்தம் ஏற்பட்டது என்றும் யாரால் தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்றும் அர்ஜுன் மஹேந்திரன் உறுதியான சாட்சியம் ஒன்றை வழங்கி இருந்தார். அந்த நபர் தற்போது ஜனாதிபதி அநுரகுமாரவுடனே இருக்கிறார். அதனாலே அர்ஜுன் மஹேந்திரனை கொண்டுவராலமல் இருப்பதற்கு காரணமாகும் என்றார்.





