மைத்திரிபால சிறிசேனவுக்கு 'மிகவும் மகிழ்ச்சியான காலகட்டத்தின் ஜனாதிபதி பட்டம் வழங்கி கௌரவிப்பு
'குளோபல் பிராண்ட் விருதுகள் 2026' மற்றும் 'ஷீ ஃபார் தி நேஷன் - சீசன் 2' ஆகியவற்றின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 'மிகவும் மகிழ்ச்சியான காலகட்டத்தின் ஜனாதிபதி' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதம விருந்தினராக சிறிசேன கலந்துகொண்டார். கே.ஜி.எஃப் திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற இந்திய நடிகர் கருடா ராம் உட்பட பல சர்வதேச விருந்தினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
'குளோபல் பிராண்ட் விருதுகள் 2026' மற்றும் 'ஷீ ஃபார் தி நேஷன் - சீசன் 2' ஆகியவற்றின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்ற இந்த விழாவில், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள், தொழில்முனைவோர்கள், தொழில் வல்லுநர்கள், பெண் தலைவர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக நாமத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





