இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமலுக்கு அழைப்பாணை
குறித்த தினம் காலை 9மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஆணைக்குழு தனது கட்சிக்காரருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தினம் காலை 9மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஆணைக்குழு தனது கட்சிக்காரருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணியான முதித்த ஆர்.லொக்குமுதலி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன் நாமல் ராஜபக்ஷ இந்த அழைப்பாணைக்கு இணங்க குறித்த தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்றும் குறிப்பிட்ட அவர் கடந்த திங்கட்கிழமையன்று ஆணைக்குழுவின் முன்பாக ஆஜராகுமாறு முதலில் அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இந்த அழைப்பாணைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,





