கமேனி மீதான தாக்குதல் சாத்தியப்பாடுகள் குறித்த பார்வை
தலைவரைச் சுற்றியுள்ள உயர்மட்டப் பாதுகாப்புக் குழுவிலேயே உளவாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியதன் மூலம் ஈரானிய அதிகார அடுக்குகளில் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிகள் வெற்றி கண்டுள்ளனர்.
ஈரானின் அதியுயர் தலைவரான அயாத்துல்லா அலி கமேனி மீதான தாக்குதல், நவீன காலப் போர் வரலாற்றில் மிகவும் நுணுக்கமான மற்றும் அதிர்ச்சிகரமான இராணுவ நடவடிக்கையாகப் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விதம், எதிர்த்தரப்பின் உளவுத்துறை ஊடுருவல் மற்றும் தொழில்நுட்ப வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. பெப்ரவரி 28 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராகப் போரை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானின் அதிகார மையத்தை நிலைகுலையச் செய்யும் நோக்கில் இந்த 'தலை துண்டிப்பு' வியூகம் வகுக்கப்பட்டது.
இஸ்ரேலிய மொசாட் மற்றும் அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்புகள் இணைந்து, பல மாதங்களாகக் கமேனியின் நடமாட்டங்களைக் கண்காணித்து வந்ததன் விளைவாகவே இத்தாக்குதல் சாத்தியமானது. இதற்காக அவற்றின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் அதிகமிருந்தது.
இந்தத் தாக்குதலின் மிக முக்கிய வியூகம் 'சைபர் மற்றும் எலக்ட்ரோனிக் போர்முறை' ஆகும். தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, ஈரானின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்பு வலையமைப்பும் (யுசை னுநகநளெந புசனை) முடக்கப்பட்டது.
குறிப்பாக, ஈரானிடம் உள்ள ரஷ்ய தயாரிப்பான ளு-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளின் ரேடார்கள், 'ஜேமிங்' (துயஅஅiபெ) தொழில்நுட்பம் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதனால், தாக்குதலுக்கு வந்த அமெரிக்காவின் எப்-35 ஸ்டெல்த் விமானங்கள் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்ததை அந்நாட்டு இராணுவத்தால் கண்டறிய முடியாமல் போனது. இது ஈரானின் பாதுகாப்பு வளையத்திற்குள் ஏற்பட்ட மிகப்பெரிய ஓட்டையாகக் கருதப்படுகிறது.
கமேனி தங்கியிருந்த இடம் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள 'அல்போர்ஸ்' மலைத்தொடருக்குக் கீழ் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு கொண்ட நிலத்தடிப் பதுங்கு குழியாகும். இது அணு ஆயுதத் தாக்குதலைக் கூடத் தாங்கும் வகையில் 300 அடி ஆழத்தில் கொன்கிரீட் மற்றும் ஈயத் தகடுகளால் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தளத்தின் துல்லியமான வரைபடத்தை மொசாட் முகவர்கள் ஈரானியப் பாதுகாப்புப் பிரிவிலுள்ள உயர் அதிகாரிகளின் உதவியுடன் முன்னரே பெற்றிருந்தனர். இந்த உளவுத் தகவல் துல்லியமாக இருந்ததால், ஏவுகணைகள் பதுங்கு குழியின் எந்தப் புள்ளியில் தாக்கினால் உள்ளே ஊடுருவ முடியும் என்பதைத் தாக்குதல் நடத்தியவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டனர்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 'பங்கர் பஸ்டர்' (டீரமெநச டீரளவநச) ஏவுகணைகள் வியக்கத்தக்க தொழில்நுட்பம் கொண்டவை. பொதுவாக ஒரு குண்டு வெடித்தால் அதன் சக்தி மேலோட்டமாகவே பரவும். ஆனால், இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட யு-57 (புடீரு-57யுஃடீ) ஏவுகணைகள், நிலத்தடியில் பல அடுக்கு கொங்கிரீட்டுகளைத் துளைத்துச் சென்று, கமேனி இருந்த அறையின் கூரைப்பகுதியில் வெடித்தன.
'கைனடிக் எனர்ஜி' (முiநெவiஉ நுநெசபல) எனப்படும் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி, அதிவேகத்தில் நிலத்தைத் துளைக்கும் இந்த ஏவுகணைகள், இலக்கை அடையும் வரை வெடிக்காமல் இருந்து, பதுங்கு குழியின் உட்பகுதியை அடைந்ததும் ஒரு பாரிய அழுத்தத்தை உருவாக்கி அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டவை.
மற்றொரு முக்கிய வியூகம் 'ஆளில்லா விமானங்களின் (னுசழநௌ) ஒருங்கிணைப்பு' ஆகும். ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்னதாக, சிறிய வகை 'மைக்ரோ ட்ரோன்கள்' அந்தத் தளத்தைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டன. இவை கமேனியின் தொலைபேசி சமிக்ஞைகள் மற்றும் அவர் இருந்த அறையின் வெப்ப அலைகளை உடனுக்குடன் அமெரிக்கக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வந்தன.
இதன்மூலம் அவர் அந்தப் பதுங்கு குழியில் இருக்கிறார் என்பது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தாக்குதலில் அயாத்துல்லா அலி கமேனி படுகாயமடைந்ததோடு, ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் மூத்த தளபதிகளும் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் ஈரானின் இறையாண்மைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். நாட்டின் அதியுயர் தலைவர் தங்கியிருக்கும் மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியத் தளம்கூட பாதுகாப்பானது அல்ல என்பதை இது நிரூபித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது பதிலடி நடவடிக்கைகளை மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நகரங்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதித்து, இலங்கையைப் போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதலாக, இந்தத் தாக்குதலின் பின்விளைவுகள் ஈரானின் உட்புறப் பாதுகாப்பை முற்றிலுமாக நிலைகுலையச் செய்துள்ளன. ஒரு நாட்டின் அதியுயர் தலைவர் இவ்வளவு இரகசியமான இடத்தில் இருக்கும்போது தாக்கப்பட்டார் என்பது, ஈரானிய பாதுகாப்புப் படையினருக்குள் அந்நிய உளவு அமைப்புகளின் ஊடுருவல் எந்தளவுக்கு ஆழமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
இதனால் ஈரானிய இராணுவத்திற்குள் தற்போது ஒருவரையொருவர் சந்தேகிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு 'உளவியல் போர்முறை' (Pளலஉhழடழபiஉயட றுயசகயசந) வியூகமாகவும் பார்க்கப்படுகிறது. தலைவர் பலவீனமடையும் போது, ஒட்டுமொத்த தேசத்தின் மன உறுதியும் சிதைக்கப்படும் என்பது தாக்குதல் நடத்தியவர்களின் கணிப்பாகும்.
மேலும், இத்தாக்குதல் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் ஈரானின் எரிசக்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் மீதும் 'ஸ்டக்ஸ்நெட்' (ளுவரஒநெவ) போன்ற மேம்படுத்தப்பட்ட வைரஸ்கள் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது ஈரானின் தகவல் தொடர்பு மற்றும் கட்டளை மையங்களை முடக்கியது.
இதன் விளைவாக, கமேனி மீதான தாக்குதல் நடந்தபோது, அத்தகவலை உடனுக்குடன் கடத்திச் செல்லவோ அல்லது தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ கீழ்மட்ட அதிகாரிகளால் முடியாமல் போனது. இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் முறையினால், ஈரான் தனது வரலாற்றிலேயே மிக நெருக்கடியான நிலையைச் சந்தித்துள்ளது.
இத்தாக்குதலின் 'விளைவு மேலாண்மை' என்ற வியூகம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே இது தொடர்பான தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் கசியவிடப்பட்டன. இது ஈரானியத் தலைமைத்துவத்தின் பலவீனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தலைவரைச் சுற்றியுள்ள உயர்மட்டப் பாதுகாப்புக் குழுவிலேயே உளவாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியதன் மூலம் ஈரானிய அதிகார அடுக்குகளில் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிகள் வெற்றி கண்டுள்ளனர்.
இச்சம்பவம் மத்திய கிழக்கில் நீண்டகாலப் போரைத் தூண்டியுள்ளதுடன், உலகளாவிய மசகு எண்ணெய் சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக, கமேனி மீதான இந்தத் தாக்குதல் வியூகம் என்பது உளவுத்துறையின் துல்லியம், சைபர் போர்முறை மற்றும் அதிநவீன ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாகும்.





