சீனப் பிரஜையின் 2 கோடி ரூபா திருட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது
கைதான சந்தேகநபர் 21 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்த 2 கோடி ரூபா பணத்தை திருடப்பட்ட சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பிரஜை ஒருவருக்கு சொந்தமான சுமார் இரண்டு கோடி ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைளுக்கமைய மேற்படி சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 21 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவின் வழிகாட்டலில், கொல்லுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சிலோகம தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





