Home » உலகச் செய்திகள் » இரு கொரியாக்களின் தலைவர்கள் மேற்கொண்ட சந்திப்பை அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்

இரு கொரியாக்களின் தலைவர்கள் மேற்கொண்ட சந்திப்பை அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இன்று சந்தித்தனர்.

👤 Saravana Rajendran27 April 2018 3:01 PM GMT
Share Post

அதில் கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுஆயுதம் ஒழிப்புகுறித்து அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இச்சந்திப்பை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை மே அல்லது ஜூன் மாதம் சந்திக்கவிருப்பதாய்த் தாம் எதிர்பார்ப்பதாக திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
அதற்குமுன் அவர் தென்கொரியத் தலைவர் மூனைச் சந்திக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.