பிரதமர் கலாநிதி ஹரிணி நாடு திரும்பினார்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரிகளையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பூட்டானில் நடைபெற்ற 2026 உலகளாவிய நனவான உணவு முறைமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கை திரும்பியுள்ளார்.
பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இதன்போது, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியல் வாங்சுக் மற்றும் பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் தோப்கே ஆகியோரை பிரதமர் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
அத்துடன், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் யேசாங் டி தாபா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளையும் பிரதமர் சந்தித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரிகளையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை – பூட்டான் நாடுகளுக்கு இடையிலான கல்வி, கலாசாரம், சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.





