அனுத ஜனாதித் சமரகோன் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகபர்களுக்கு விளக்கமறியல்
சுமார் 50 மீற்றர் தொலைவில் இருந்தே சந்தேகநபரே அனைத்துக் நடவடிக்கைகளையும் வழிநடத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித் சமரகோன் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர் 23-07-2026 அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித் சமரகோன் பண்டார உள்ளிட்ட சந்தேகநபர்கள் கொள்ளுப்பிட்டிய பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் பிரதான இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவரே என்றும், இவர் கிரிப்டோ நாணயம் மூலமாகவும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் இருந்தே சந்தேகநபரே அனைத்துக் நடவடிக்கைகளையும் வழிநடத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை 24 மணித்தியாளங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுதிவழங்கியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.





