இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக போராட்டம்
நீட் தேர்வு உட்பட கல்வி உரிமைகள், மற்றும் அடிப்படைத்தேவைகள் ஆகியவற்றை இளையோரால் முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி உட்பட அடிப்படை உரிமைகளுக்காக போராடும் இளையோரின் கோரிக்கைகளை வலுச்சேர்க்கும் வகையிரும் அடக்குமுறைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முறைமை மாற்றம் மற்றும் பொதுமக்களின் உரிமைகள், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றுக்காக செயற்படும் இளைய செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்க தரப்பினர் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3மணிக்கு இந்திய உயர்ஸ்தானிகரத்துக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரகலய போராட்ட காலத்தில் இந்தியாவின் மாணவர் அமைப்புக்கள் உள்ளிட்ட இளையோர் துணையாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்த நிலையில் தற்போது நீட் தேர்வு உட்பட கல்வி உரிமைகள், மற்றும் அடிப்படைத்தேவைகள் ஆகியவற்றை இளையோரால் முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன. இதன்காரணமாக இந்தியாவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.





