கொழும்பு கோட்டை –தலைமன்னார் புகையிரத சேவை ஆரம்பம்
சனிக்கிழமை காலை 04.10 தலைமன்னார் புகையிரத நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி புகையிரதம் புறப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை – தலைமன்னார் பயணிகள் புகையிரத சேவை 24-07-2026 அன்று முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
தித்வா புயல் தாக்கத்தால் வடக்கு புகையிரத பாதை சேதமடைந்த நிலையில் கோட்டை – தலைமன்னார் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டது.
பாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (24) மாலை 03.50 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதம் இன்று இரவு 10.30 மணியளவில் தலைமன்னாரை சென்றடையும்.
சனிக்கிழமை காலை 04.10 தலைமன்னார் புகையிரத நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி புகையிரதம் புறப்படவுள்ளது.
அநுராதபுரம் புதிய நகர புகையிரத நிலையத்தில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் அந்த புகையிரத நிலையத்தில் இந்த புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது.





