ஜூலை 30, 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இடைநிறுத்தம் -தொழில் திணைக்களம்
30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்
தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் 23-07-2026 அன்று விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.





