மஹிந்த,சிராந்தி , ரோஹித , உதய சிறையில் உள்ள நாமலை நேரில் சென்று பார்வை
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை நலம் விசாரிப்பதற்காக பெற்றோரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிராந்தி ராஜபக்ஷ , பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார் பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான போது கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவரை பலரும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன், அவர் தற்போது சிறைச்சாலை வாட்டுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





