Breaking News
ஈரான் கடல் எல்லையில் தாக்கப்பட்ட எல்பிஜி கப்பலில் இருந்த 28 இந்தியர்களுக்கு பாதிப்பில்லை.
அந்த கப்பலில் பணியாற்றிய 28 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மொசாம்பிக் கொடியுடன் பயணித்த எல்பிஜி எரிவாயு கப்பலான திஷா, ஈரானின் கடல் எல்லைக்குள் வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளானது.
அந்த கப்பலில் பணியாற்றிய 28 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.